
"பேச்சுக்குப் பேச்சு வழக்காடாதே. இந்தச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடாமல் படித்து உருப்படுவதைக் கவனி"
"எனக்குத் தெரியும். அதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேத்த வேண்டாம்."
"தெண்டம் அழுவுவது நாந்தானே".
"அது உங்கள் கடமை. என் திறமை இவ்வளவுதான். அதை மழுங்க அடித்து விட வேண்டாம்".
"திறமை இருக்கு, திமிரும் இருக்கு. அதனால்தான் சொல்வது காதில் ஏறமாட்டேங்குது". டைனிங் டேபிளில் முதலில் கடுவன் பூனையாக இருந்த இருவரையும் ருசி மிக்க உணவு மாற்றி விட்டது. அவரைக்காய்க் கூட்டை ஒரு கை பார்ப்பவள், விரலால் கிண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தவர் கண்கலங்கி விட்டார். அதை ஓரக் கண்ணால் பார்த்தவள் அழுதே விட்டாள் [மேலும்]