
இன்றைக்கு வந்ததையும் சேர்த்து இது மூன்றாவது வாழ்த்து அட்டை. இதை அனுப்பிய அந்த மாதவி யார் என்று புரியாத புதிராகவே உள்ளது. என்னுடைய பள்ளியிலும் இந்தப் பெயரில் ஆசிரியையோ மாணவியோ கிடையாது. இது நான் வேலை செய்யும் மூன்றாவது பள்ளி. ஆனால் இந்த மூன்று பள்ளியிலும் எனக்குத் தெரிந்து இந்த பெயரில் யாரும் இருந்ததாக நினைவில்லையே...அப்படி இருக்கும் போது, எனக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. காலையில் பள்ளிக்குக் கிளம்பும் போதே கவிதாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்கவே பெரும்பாடுபட வேண்டியிருந்தது. எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. தாமதமாய் திருமணம் செய்ததால்தான் இன்னும் எங்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை என்று அவள் மருகுவது புரியாமல் இல்லை ஆனால் அது பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமாய் தோன்றியது. [மேலும்]